தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வரதட்சணை குற்றச்சாட்டு: அமெரிக்க மாப்பிள்ளை விமான நிலையத்தில் கைது - வரதட்சணை கொடுமை வழக்கு செய்திகள்

சென்னை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகாரில் அமெரிக்க மாப்பிள்ளையை காவல் துறையினர் விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.

வரதட்சணை கொடுமை: அமெரிக்க மாப்பிள்ளை விமான நிலையத்தில் அரஸ்ட்!
வரதட்சணை கொடுமை: அமெரிக்க மாப்பிள்ளை விமான நிலையத்தில் அரஸ்ட்!

By

Published : Jan 18, 2021, 11:48 AM IST

விழுப்புரம் மாவட்டம் முத்தையாள் நகரைச் சேர்ந்தவர் வசந்தன்(33). இவர் மேட்ரிமோனி மூலம் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜெயஸ்ரீ( 29) என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜெயஸ்ரீயை வரதட்சணை கேட்டு கணவர் வசந்தன், அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தனர்.

பின்னர், வசந்தனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துவிட்டதால் மனைவி ஜெயஸ்ரீயை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அமெரிக்கா சென்ற பின்பும் வசந்தன் தனது மனைவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால், வேறு வழியில்லாமல் ஜெயஸ்ரீ கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை வந்த ஜெயஸ்ரீ உடனே இது குறித்து அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வசந்தன், அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வசந்தனை காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் நீண்ட நாட்களாக ஆஜராகமால் இருந்ததால் வசந்தன், அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு விமான நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (ஜன. 17) சென்னை வந்த வசந்தனை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். இவர் மீது பெண்ணை கொடுமைப்படுத்துதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...திமுக-காங்கிரஸ் கொள்கை ரீதியாக ஒற்றுமையுடன் திகழ்கிறது- கே எஸ் அழகிரி

ABOUT THE AUTHOR

...view details