தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

முறை தவறிய உறவால் இரட்டைக் கொலை! - திருமணத்தை மீறிய உறவு

சென்னை: முறை தவறிய உறவால் மனைவி உள்ளிட்ட இருவரை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

murder
murder

By

Published : Jun 5, 2020, 2:27 PM IST

எம்.ஜி.ஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் முருகன் (38). பெயிண்டராக பணியாற்றி வந்த இவரோடு மனைவி லட்சுமி (35), 13 வயது மகள் ஆகியோர் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அதேப்பகுதியில் குப்பன் தெருவில் வசித்த வந்த கோவிந்தசாமி (62) என்பவருடன் லட்சுமிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கும், செந்தில் முருகனுக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஒரு நாள் செந்தில் முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லட்சுமி, கோவிந்தசாமியுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் லட்சுமி மீது கடும் கோபத்தில் இருந்த செந்தில் முருகன், நேற்று முன்தினம் (ஜூன் 3) கோவிந்தசாமியின் வீட்டிற்கு சென்று லட்சுமி மற்றும் கோவிந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே லட்சுமி உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் கோவிந்தசாமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் செந்தில் முருகனை கைது செய்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தசாமியும் நேற்றிரவு (ஜூன் 4) உயிரிழந்தார். இதனால் செந்தில் முருகன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை, இரட்டை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: லாரி தரகர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details