கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூரைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை அறிவியல் பிரிவில் மனிதநேயம் (MA Humanities) என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ஐஐடி வளாக சரவியூ விடுதியில் அறை எண் 349இல் தங்கியிருந்தார்.
நவம்பர் 8ஆம் தேதி இரவு தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில், பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், "தனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தனது முதல் மகள் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் சேர்ந்து நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, பட்டப்படிப்பு மேற்கொண்டுவந்தார்.
இந்நிலையில், நவம்பர் 9ஆம் தேதி பெண் கல்லூரி விடுதியின் அறையில் தூக்கிட்டுத் இறந்ததாகத் தகவல் வந்தது. இதனால், எனது மனைவி சென்னை சென்று, மகளின் உடலை வாங்கச் சென்றார். பின்னர், இது தொடர்பாக எனது நண்பர் கொல்லம் மேயர் ராஜேந்திர பாபுவுடன், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்தோம்.