திருப்பூர் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வந்தவர் பாண்டியராஜன் (27). இவருக்கு மனைவி சித்ரா (21) மற்றும் 5 வயது குழந்தை ஆகியோர் உள்ளனர். பாண்டியராஜன் சுமை தூக்கும் தொழிலாளராகவும், அவரது மனைவி சித்ரா பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.
இதனிடையே, சித்ராவுக்கும், ராக்கியாபாளையத்தை சேர்ந்த அருண் (22) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை அறிந்த பாண்டியராஜன், மனைவியை கண்டித்துள்ளார். எனினும் அருணுடன் சேர்ந்து வாழவே சித்ரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களாகவே பாண்டியராஜன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.