தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஒசூரில் சிகரெட் நிறுவனத்தின் அலுவலர் காரில் கடத்தல்: சிசிடி காட்சிகளை வைத்து காவல் துறை விசாரணை - சிகரெட் நிறுவனத்தின் அலுவலர் காரில் கடத்தல்

கிருஷ்ணகிரி: ஒசூரில் பிரபல சிகரெட் நிறுவனத்தின் அலுவலரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்திமுனையில் காரில் கடத்திச்சென்றுள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிசிடிவி
சிசிடிவி

By

Published : Dec 3, 2020, 11:33 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கிவரும் பிரபல சிகரெட் நிறுவனமான ஏடிசி என்ற தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலராகப் பணியாற்றிவருபவர் பீட்டர் லூயிஸ் (44). இவர் ஒசூரில் அண்ணாமலை நகர் குடியிருப்புப் பகுதியில் வசித்துவருகிறார்.

ஒசூரில் சிகரெட் நிறுவனத்தின் அலுவலர் காரில் கடத்தல்: சிசிடி காட்சிகளை வைத்து காவல் துறை விசாரணை!
இவர் நேற்று (டிச. 02) மாலை வழக்கம்போல் பணி முடிந்து அவரது காரில் வீடு திரும்பும்போது மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முத்துமாரியம்மன் கோயில் அருகே குறுக்கே காரை மடக்கி கத்திமுனையில் பீட்டரை அவர்களது காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
அப்போது பீட்டரை பின்தொடர்ந்து வந்த அவரது நிறுவன ஊழியர் ஒருவர் இதைப் பார்த்து நிறுவனத்திற்கும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பீட்டர் லூயிஸின் மனைவி இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சிப்காட் காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனா்.

சிசிடிவி காட்சியில் காரில் கடத்திச் செல்வது பதிவாகியுள்ளது. அந்தக் காணொலியை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ABOUT THE AUTHOR

...view details