ஹைதராபாத் (தெலங்கானா):சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட சந்தா நகரைச் சேர்ந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் மனைவியின் தந்தை தான், தன் மகனை கூலிப் படை வைத்து கொலை செய்ததாக உயிரிழந்த இளைஞரின் தாயார் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
HONOUR KILLING IN HYDERABAD ஹைதராபாத் சந்தா நகரைச் சேர்ந்த ஹேமந்த் சமீபத்தில் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு டி.என்.ஜி.ஓ காலனிக்கு குடிபெயர்ந்தார். இத்தருணத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி ஹேமந்த்தை, அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல் அவசர ஊர்தி ஓட்டுநராக அவதாரம் எடுத்திருக்கும் வீரலட்சுமியின் பயணம்!
இதுகுறித்து கச்சிபவுலி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சூழலில், ஹேமந்த்தை காவல் துறையினரும், உறவினர்களும் தேடி வந்த நிலையில், இன்று (செப். 25) சங்கா ரெட்டி மாவட்டத்தில் இறந்த நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
HONOUR KILLING IN HYDERABAD ஹேமந்த்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இவர் எவ்வாறு இறந்தார்? ஹேமந்த்தின் உறவினர்கள் கூறுவது போல் ஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.