தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

விஜயபுராவில் பாதசாரி மீது கார் மோதி விபத்து: சிசிடிவி கேமரா வெளியீடு - Vijayapura Car Accident Recoreded by CCTV camera

பெங்களூரு: விஜயபுரா மாவட்டத்தில் சாலையில் நடந்துச் சென்றவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijayapura Car Accident CCTV
Vijayapura Car Accident CCTV

By

Published : Aug 28, 2020, 5:51 PM IST

Updated : Aug 28, 2020, 6:41 PM IST

கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் முடேபிஹாலா நகரத்தின் பிதராகுண்டி சாலையில் இரண்டு பாதசாரிகள் நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார்‌ ஒன்று சாலையில் நடந்துச் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய கார் முடேபிஹாலா பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

விஜயபுராவில் பாதசாரி மீது கார் மோதிய விபத்து

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என உதவி காவல் மல்லப்பா மட்டி கூறினார்.

Last Updated : Aug 28, 2020, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details