சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த நாகர்கோவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்டார். இவ்வழக்கில் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனையப்பட்ட வழக்கான இதில், பிணை கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்க வேண்டும். பிணை வழங்கினால் சாட்சிகளைக் கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.