தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கள்ளநோட்டு கும்பலின் தலைவன் கைது!

கன்னியாகுமரி: புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளநோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட குமரி மாவட்ட இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

head-of-counterfeit-gang-arrested
head-of-counterfeit-gang-arrested

By

Published : May 20, 2020, 5:15 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில், மது வாங்க வந்த இரண்டு நபர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சந்தேகமடைந்த டாஸ்மாக் ஊழியர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவலளித்தார்.

இதனையடுத்து அந்த இரு நபர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஆய்வு செய்ததில், அது கள்ளநோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அந்த நபர்களைப் பிடித்த, காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தோஷ்குமார், சுரேஷ்குமார், ராமச்சந்திரன், முகமது இப்ராகிம், முகமது நசுருதீன் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு கள்ளநோட்டுக்களை அச்சிட்டு, அதனை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

பின் அந்த ஐந்து பேரையும் கைது செய்த காவல் துறை, அவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2000, 500, 200, 100 ரூபாய் கள்ளநோட்டுக்களையும், அதனை அச்சடிக்கப் பயன்படுத்திய அச்சு இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகவலறிந்து தலைமறைவான இக்கூட்டத்தின் தலைவர் மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள்

இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிலுள்ள மணிகண்டன் இல்லத்தில் வைத்து, அவரை தனிப்படைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரது வீட்டில் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டிருந்த சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், பிடிபட்ட கள்ளநோட்டு கும்பல் தலைவனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பால் பாக்கெட் திருடிய பாய்ஸ்: சிசிடிவி மூலம் சிக்கினர்!

ABOUT THE AUTHOR

...view details