தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா: நாளை இடைக்கால உத்தரவு! - interim order on dmk gutka issue

திமுக குட்கா
திமுக குட்கா

By

Published : Sep 23, 2020, 12:41 PM IST

Updated : Sep 23, 2020, 7:24 PM IST

12:30 September 23

சென்னை:சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை திமுகவினர் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மீண்டும் செப்டம்பர் 7ஆம் தேதி உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நாளை(செப். இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்களை சட்டப்பேரவைக்குள் எடுத்து வந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக, பேரவை உரிமைக் குழு செப்டம்பர் 7ஆம் தேதி இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான திமுக வழக்குரைஞர்கள், “2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அனுமதி பெற்று தான் ஸ்டாலின் குட்கா விவகாரத்தை எழுப்பினார். குட்கா பொருட்களை காட்டி தடை செய்யப்பட்ட பொருள் விற்கப்படுவதை வெளிப்படுத்தினார்.  

இதையடுத்து, ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஸ்டாலின் உட்பட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தடையை மீறி குட்கா வைத்திருந்தது உரிமை மீறல் இல்லை என நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இச்சூழலில், உரிமை குழுவால் திமுக உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிமைக் குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏற்கனவே ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, தற்போது பாரபட்சத்துடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிந்துரை நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எனவே தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கும் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண், “சட்டப்பேரவை விதி 228இன் படி உரிமைக் குழு உறுப்பினர் அல்லது தலைவர் பாரபட்சமாகவும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நோட்டீஸ் அனுப்பி இருந்தால், மனுதாரர்கள் உரிமை மீறல் குழுவிலேயே ஆட்சேபம் தெரிவிக்கலாம். 

அதுபோல செய்யாமல் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மேலும், உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக அவர்கள் பதிலளிக்க செப்டம்பர் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனது அனுமதியில்லாமல் குட்காவை காட்டியது உரிமை மீறல் என்பதால் சபாநாயகர் தாமாக முன் வந்து பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பியுள்ளார். 

உரிமை மீறல் என்பதை உரிமைக்குழு முடிவு செய்து, சபைக்கு மீண்டும் அனுப்பியது. உரிமைக் குழு மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு விவாதங்கள் நடைபெறும். தற்போதைய நோட்டீஸ், சபாநாயகரின் அனுமதியின்றி குட்காவை காட்டியதற்காவே அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை 18 உறுப்பினர்களும் நோட்டீசுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்பதால் நோட்டீசுக்கு தடை விதிக்கக்கூடாது. நாளையே சட்டப்பேரவைக் கூட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை போல திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகர் உத்தரவிடும் வரை உரிமைக்குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. 

இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா புஷ்பா சத்தியநாராயணா, குட்கா பொட்டலங்களை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அனுமதி பெறாமல் காண்பிக்கப்பட்டதா? என்பதை முந்தைய நோட்டீசில் உரிமை குழு குறிப்பிடவில்லை.

மேலும், முந்தைய நோட்டீசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்த உடனேயே இரண்டாவது முறையாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி வழக்கில் நாளை (செப்டம்பர் 24) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். 

Last Updated : Sep 23, 2020, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details