திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின்பேரில் அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான அலுவலர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினார்
குட்கா விற்பனை அமோகம்.. செக் வைத்த அலுவலர்கள்! - வாணியம்பாடியில் குட்கா பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
![குட்கா விற்பனை அமோகம்.. செக் வைத்த அலுவலர்கள்! Gutka traders arrested at Vaniyambadi in Tirupattur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:45:51:1607966151-tn-tpt-07-gutkha-seized-vis-scr-pic-tn10018-14122020214929-1412f-1607962769-470.jpg)
Gutka traders arrested at Vaniyambadi in Tirupattur
அப்போது கோனாமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 500 பாக்கேட் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கச்சேரி சாலையில் உள்ள பட்டேல் மார்க்கெட்டிங் என்கிற வடநாட்டு வியாபாரியின் கடையில் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கோணமேடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார், கச்சேரி சாலை பகுதியைச் சார்ந்த துக்காராம் ஆகிய இருவரை கைது செய்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Dec 14, 2020, 11:05 PM IST