சென்னை: ஆட்டோவில் குட்கா போதை பாக்குகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தரமணியில், தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை ஆட்டோவில் கடத்திச் சென்று சிலர் விற்பதாக மயிலாப்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், தரமணி களிகுன்றம் பகுதியில் வாகனச் சோதனையில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.