ஈரோடு:அனுமதியில்லாமல் வேட்டைக்காக துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் சமூக விரோத கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொண்டப்பநாயக்கன்பாளையம் கருமலைக்கரடு பகுதியைச் சேர்ந்த சதீஸ், விவசாயி சுப்பிரமணியம் ஆகியோர் துப்பாக்கியுடன் திரிவதை கண்டு அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.