தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஆசிட் வீசிய மாணவன் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது! கடலூரில் அதிரடி! - goonda act 27 arrested in cuddalore

கடலூர்: மாணவி மீது ஆசிட் வீசிய மாணவன் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிட் வீசிய மாணவன் கைது

By

Published : Sep 29, 2019, 5:29 PM IST

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குற்றச்செயல்கள் அதிகமாக நடந்து வருவதால் இதனைத் தடுக்க காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வழிப்பறி, கொள்ளைகள், திருட்டுச் சம்பவங்கள், இருசக்கர வாகன திருடர்கள், போதைப் பொருள் விற்பனை என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட 27 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீசிய மாணவனை முதன்முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பதவியேற்று இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் 27 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்போம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட காவல் துறையினர் அதிரடி!

இதையும் படியுங்க:
காதல் விவகாரத்தால் மாணவி மீது ஆசிட் வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details