தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத நித்திய கல்யாண வெங்கடேச பெருமாள் மற்றும் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தெய்வ தரிசனம் செய்தனர்.
அப்போது, அதிகமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துள்ளனர். மொத்தமாக 15 சவரன் நகைகளை திருடியுள்ளனர்.
கும்பாபிஷேகத்தில் புனிதநீர் தெளித்த உடன், தங்களது நகைகள் திருடப்பட்டதை அறிந்த பெண்கள் கண்ணீரோடு, பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
நகையைப் பறிகொடுத்த சோகத்தில் பாட்டி இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த தருமபுரி காவல்துறையினர், நகைகளை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர். கவலை போக்க மன அமைதியை தேடி கோயிலை நாடி சென்ற பக்தர்களுக்கு, கூடுதல் துயரத்தை தரும் விதமாக இந்த திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.