துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் மீட்பு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, புதுக்கோட்டையை சோ்ந்த உமகொலுசு பீவி (49), மஹரீவா பீவி (51), மதுரையை சோ்ந்த குணசுந்தரி (35) ஆகிய 3 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவா்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று பெண் அதிகாரிகள் சோதித்தனர்.
அப்போது ஆடைகளுக்குள் 689 கிராம் தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட்கள் ஆகியவற்றை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.31.41 லட்சம் ஆகும். மேலும், அவா்கள் வந்த விமானத்திற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த துணி பையிலிருந்து, 802 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.41.71 லட்சம். அதையும் அதிகாரிகள் கைப்பற்றினா்.