திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், ஷோபனா தம்பதியினர். இவர்கள் மேல்வணக்கம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ஷோபனா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
அப்போது தம்பதியினர் கூச்சலிட்டதால், இரு சக்கர வாகனத்தில் தப்பியோடிய இருவரையும் அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டியதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாகத் தாக்கி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டிவைத்தனர்.