தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வீட்டின் பூட்டை உடைத்து நகைக்கொள்ளை! - அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை முயற்சி!

சென்னை: தலைமையாசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த கும்பல், அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft
theft

By

Published : Dec 25, 2020, 10:07 AM IST

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாசா நகர் வளையாபதி தெருவில், நேற்று 5க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டின் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்துள்ளனர்.

அதே பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றிருக்கும் நிலையில், மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

முன்னதாக கொள்ளையடிக்க திட்டமிட்டு தெருவிற்குள் வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வீடுகள் அனைத்தையும் நோட்டமிட்டுள்ளனர். கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர்கள் அங்கு, கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். மேலும், கொள்ளையடிக்கும் போது அருகில் உள்ளவர்கள் யாரும் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக, 5க்கும் மேற்பட்ட வீடுகளின் வெளிக்கதவுகளை பூட்டியுள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைக்கொள்ளை! - அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை முயற்சி!

இது குறித்து பீர்க்கன்காரணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் அருகில் இருக்கும் மூன்று வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: சென்னையில் வாட்ஸ்அப் மூலம் லாட்டரி விற்பனை: ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details