துபாயிலிருந்து இன்று அதிகாலை சென்னை வந்த ஃப்ளை துபாய் மீட்பு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது திருவாரூா் மாவட்டம் அத்திக்கடையை சோ்ந்த முகமது அப்பாஸ் (35) என்ற பயணியின் உடமைகளை சோதித்தபோது, பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து முகமது அப்பாஸ் கைது செய்யப்பட்டார். 5.6 கிலோ இருந்த குங்குமப்பூவின் பன்னாட்டு மதிப்பு ரூ.13.4 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
’மீட்பு விமானத்தில் கடத்தப்பட்ட குங்குமப்பூ’ - தங்கம் கடத்தல்
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானங்களில் ரூ.15.5 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் மீட்பு விமானத்தில், ரியாத்திலிருந்து துபாய் வழியாக வந்த பாலமுருகன் (36) என்ற பயணி கொண்டு வந்திருந்த, பேரீச்சம் பழம் பாக்கேட்டுகளை சோதனை செய்த போது, 20 கிராம் எடையுடைய 2 தங்கக்கட்டிகளை பேரீச்சம் பழங்களுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரூ.2.1 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பாலமுருகனும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் ரோப்கார் நிலையத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு!