ஈரோடு மாவட்டம், தாளவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் இந்துமதி (21), ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துவந்துள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சதீஷ்குமாருக்கும் (28) இந்துமதிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது பின்னாளில் காதலாக மாறவே ஓராண்டிற்கு முன்பு, இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலனியில் இத்தம்பதியர் வாடைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
சதீஷ்குமார் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துவருவதாகக் கூறப்படுகிறது.