டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ளது. டெல்லி ஷாகுர் பஸ்தி ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் கடந்த டிசம்பர் 10ஆம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. இளம்பெண் ஒருவர் நடைமேடையில் ரயிலுக்குக் காத்திருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
அந்தப்பெண் வீட்டிற்கு வந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். உறவினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண் மங்கோல்பூரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.