சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பிளனேடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 பண்டல்கள் கஞ்சா அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
North india gang with cannabis arrested இதைத்தொடர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாகக் கூறி அன்வர் பாஷா, சிகந்தர் பாட்ஷா, குர்ஷத் அலாம், அன்வர் ஹுசைன், ரஃபிகுல் இஸ்லாம், ரபீக் மியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவரில் அன்வர் பாஷா என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 8 கிலோ கஞ்சா பதுக்கியிருந்த காரணத்துக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
மேலும், இந்த ஆறு பேரும் தங்கியிருந்த விடுதி, ரசல் மியா மற்றும் சைபுன் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறிப்பட்டது. ரசல் மியா என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பிடிப்பட்ட வட மாநிலத்தவரை அழைத்து வந்ததுள்ளார்.
இதையடுத்து இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான ரசல் மியா மற்றும் சைபொன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை எஸ்பிலனேடு போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.