தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஆர்.கே.நகரில் நான்கு டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - Ration Rice Seized In Chennai

சென்னை: ஆர்.கே.நகரில் நான்கு டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Four Ton Ration Rice Seized In RK Nagar
Four Ton Ration Rice Seized In RK Nagar

By

Published : Jul 27, 2020, 6:40 PM IST

சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 1ஆவது தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ஆர்.கே.நகர் காவல் நிலைய உளவுத்துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கருனாநிதி நகர் சாலை ஓரத்தில் சுமார் 4 டன் எடை கொண்ட 100 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த செல்வி (50) என்பவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பாலிஷ் செய்து ஆந்திராவுக்கு கடத்துவது தெரியவந்தது.

காவல் துறையினர் தேடுவதை அறிந்த செல்வி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர். பதுக்கல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:மயிலாடுதுறை: காவிரி நீர் பாசனத்து கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details