கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஓசூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படை ஓசூர் பேருந்து நிலையம் அருகில் காவல் துறையினர் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் என்கிற பெயரில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த நான்கு நபர்களை அடையாளம் கண்டு கைதுசெய்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இராம் நகரைச் சேர்ந்த பிரசாத், பார்வதி நகரைச் சேர்ந்த அம்ஜத்கான், அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த கூப்பள்ளியப்பா, கொல்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிங்க மூர்த்தி ஆகியோர் என்பது தெரியவந்தது.