தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கஞ்சா விற்பதில் தகராறு - இளைஞரை வெட்டிய 4 பேர் கைது - கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறு

சென்னை: கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

By

Published : Sep 29, 2020, 3:25 PM IST

காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். நேற்றிரவு வ.உ.சி நகரில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தனுஷை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், தனுஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஒருவரை நேற்று கைது செய்தனர்.

தப்பியோடிய நான்கு பேரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில், புது வண்ணாரப்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் பதுங்கியிருந்த கிஷோர், முரளி என்கிற பாம் முரளி, அப்பு என்கிற சசிகுமார், வாத்து என்கிற லோகநாதன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனுஷை வெட்டியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் நால்வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கைது

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை மோதல் - ஒருவருக்கு வெட்டு

ABOUT THE AUTHOR

...view details