தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவுகடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், இரவு வாகனத் தணிக்கையில் சேலையூர் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் சென்றதால் அவர்களை பின்தொடர்ந்த காவலர்கள், பூண்டிபஜார் அருகே ஒரு வாகனத்தை மட்டும் பிடித்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.