சென்னை விமானநிலைய சரக்குப் பிரிவில் வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்திருந்த மூட்டைகளை சுங்கத் துறையினார் சோதனையிட்டனர். அப்போது சிங்கப்பூருக்கு அனுப்ப வந்த ஒரு மூட்டையில், சில்வர் சாப்பாட்டு தட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்மீது சந்தேகம் எழவே, அதைத் தனியே எடுத்து ஆய்வுசெயதனர்.
சுமார் 39 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கட்டு கட்டாக மீட்பு!
சென்னை: சிங்கப்பூருக்கு சரக்கு விமானத்தில் எவர்சில்வர் சாப்பாட்டு தட்டுகளில் மறைத்துவைத்து கடத்தப்படவிருந்த இங்கிலாந்து நாட்டு பணம் சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட முகவரி போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து சரக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தபோது, அதற்குள் எவர்சில்வர் சாப்பாட்டு தட்டுகள் 25 இருந்தன. ஆனால் ஒவ்வொரு தட்டையும் சுற்றிவைத்திருத்த பேப்பர் உறைகளை பிரித்து பாா்த்தபோது அதனுள் கட்டுக்கட்டாக இங்கிலாந்து நாட்டு பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இதையடுத்து பணத்தையும், சாப்பாட்டு தட்டுகளையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவருகின்றனர்.