நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குப் புகார் வந்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் கணேசன், காவலர் கார்த்திக் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சித்தர்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதையறிந்த தனிப்படை காவல் துறை, விற்பனையில் ஈடுபட்ட சீர்காழி வேட்டங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பழனி (19), செங்கல்பட்டு வேதாரண்யபுரம் பகுதியைச் சேர்ந்த தாவூத் மகன் வாஸித்தா என்கிற கார்த்தி (21), மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்த போண்டா என்கிற ராம்குமார் (23) ஆகிய மூன்று பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.