கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுக்காக்குட்பட்ட இறச்சகுளம் பகுதியில் இருந்து தாழாக்குடி செல்லும் சாலையில் உள்ள சாக்கடை ஓடையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது, இறந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சாக்கடை ஓடையில் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை - பச்சிளம் குழந்தையின் சடலம்
கன்னியாகுமரி: இறச்சகுளம் கிராமத்தில் பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்று சாக்கடை ஓடையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (நவம்பர் 21) பிறந்த அந்த குழந்தையை யாரோ புதருக்குள் வீசி சென்றது தெரியவந்துள்ளது. மேலும், முறை தவறி பிறந்த குழந்தையை, யாராவது கொலை செய்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பூதப்பாண்டி காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இறந்த குழந்தையின் சடலத்தை உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.