திருப்பூர் - புதுக்காடு பகுதியில் நேற்று முன்தினம் (செப் 01) உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, கார்த்திக்ராஜா (வயது 25), அழகுராஜா அவர்கள நண்பர்கள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இச்சூழலில் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைப்பதில் கார்த்திக் ராஜா தரப்பினருக்கும், அழகுராஜா தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மலர் வளையம் வைப்பதில் சண்டை - மண்டை உடைந்து உயிரிழந்த இளைஞர் - the flower ring to dead body
திருப்பூர் : இறந்தவர் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![மலர் வளையம் வைப்பதில் சண்டை - மண்டை உடைந்து உயிரிழந்த இளைஞர் மலர்வளையம் கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8662123-thumbnail-3x2-thiruppur-crime.jpg)
இந்நிலையில், தலையில் படுகாயமடைந்த கார்த்திக்ராஜா அளித்த புகாரின் பேரில், அழகுராஜா, அவரது நண்பர்கள் ஆகியோர்மீது திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று (செப்.02) மாலை பல்லடத்திலுள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற கார்த்திக்ராஜா, தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கார்த்திக்ராஜாவின் உச்சந்தலையில் பலத்த காயம் இருந்ததாகவும், சரியான சிகிச்சை எடுக்காத காரணத்தால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அழகுராஜா, சக்திவேல், சல்மான்கான் ஆகியோரின்மீது கொலை வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.