தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை - தெலங்கானாவில் கொடூரச் சம்பவம்..! - மகளை கொன்ற தந்தை

ஹைதராபாத்: மகளை பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கொடூரச் சம்பவம்

By

Published : Jul 23, 2019, 12:42 PM IST

தெலங்கானா மாநிலத்தில், மெட்ச்செல் என்னும் இடத்தில் பதின்ம பருவ பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, காவல்துறை கொலையாளியை நெருங்கும் முன்பே இறந்த பெண்ணின் தந்தை, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கிடந்த இடம்

அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த காவல்துறையினரிடம், பல நடுங்க வைக்கும் தகவல்களை தெரிவித்துள்ளார், பெண்ணின் தந்தை. அதுகுறித்து பேசிய காவல் அலுவலர் ஒருவர், “சரணடைந்த பெண்ணின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இறந்தவர் முதல் மனைவியின் மகளாவார். முதல் மனைவி சில காலத்துக்கு முன் மரணமடைந்த நிலையில், அப்பெண் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தன் மகளை சுய இச்சைக்காக பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து மகள் வெளியே சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில், அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, இரண்டு கண் விழிகளையும் பிடுங்கியதாக கூறியுள்ளார். இச்சம்பவம், அம்மாநில மக்களிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details