தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம் கைது!

சென்னை: கரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய போலி சித்த மருத்துவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

doctor
doctor

By

Published : May 6, 2020, 5:57 PM IST

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சென்னை காவல் துறையிடம் கடந்த 4ஆம் தேதி புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், “கரோனா வைரஸ் குறித்து சுகாதாரத் துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அனுமதியின்றி தகவல் பரப்பி வருகின்றனர். இது தொற்று நோய் பரவுதல் பிரிவு 8இன் படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாமல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகேயுள்ள ரத்னா சித்த மருத்துவமனை, மருத்துவர் திருத்தணிகாச்சலம் என்பவர், கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பி மக்கள் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றார். இவர் மாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி தகுதியோ, முறையான அங்கீகாரமோ இல்லாமல் செயல்பட்டு வருகிறார். இது போன்ற தவறான செய்தியை பரப்பிய இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல் துறையினர், தனிப்படை அமைத்து திருத்தணிகாச்சலத்தை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான திருத்தணிகாச்சலத்தை தேனியில் வைத்து காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் - அரசு அறிவுரை !

ABOUT THE AUTHOR

...view details