ஈரோடு:ஈரோடு மாவட்டம், கோட்டுவீராம்பாளையத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் அப்பகுதியில் வாகனத் தணிக்கை நடத்தினர்.
மாநில எல்லைகளில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல் - மூவர் கைது! - ஈரோடு குற்றம்
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மூவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு காவலர்கள் கைதுசெய்தனர்.
இதில் பத்ரகாளி அம்மன் கோயில் வீதியில் ரேசன் அரிசி 200 மூட்டைகள் லாரியில் ஏற்றப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 200 மூட்டைகள் ரேசன் அரிசி பதுக்கிவைத்து சரக்கு வாகனத்தில் ஏற்றுவது கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக உணவு பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திலகவதி தலைமையிலான காவலர்கள், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட வியாபாரி செந்தில்குமார்(44), ஒட்டுநர் ஆனந்தன், ரவிக்குமார்(40) ஆகிய மூவரை கைதுசெய்து வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.