கோவில்பட்டியைச் சேர்ந்த மிதுன் குமார், தனது மனைவி, மகள் ஆகியோருடன் பரமக்குடி வைகை நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். உப்பூர் அனல் மின் நிலையத்தில் பொறியாளராக மிதுன் பணிபுரிந்து வந்த நிலையில், அனல்மின் நிலையம் இயங்காததால் கடந்த ஓராண்டாக அவர் பணிக்கு செல்வதில்லை.
காருக்குள் மது அருந்திய நிலையில் பொறியாளர் உயிரிழப்பு! - காவல்துறையினர் விசாரணை
இராமநாதபுரம்: காரில் மது அருந்திய நிலையில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

death
இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில், மது அருந்திய நிலையில் மிதுன் குமார் உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கு வந்த எமனேஸ்வரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி கூராய்விற்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்!