தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இரண்டு வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது - arrested

கோயம்புத்தூர்: இரண்டு வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
இரண்டு வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

By

Published : Jan 4, 2021, 8:01 AM IST

கோவை மாவட்டத்தின் அன்னூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்(53), கூலித்தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று(ஜனவரி 3) அவரது வீட்டின் அருகில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு சம்பத் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் தாயார் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அன்னூர் காவல் துறையினர் சம்பத்தை கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தரங்கம்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details