தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தங்கக் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை! - கேரள போதைப் பொருள் கடத்தல்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில், கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேரியிடம் நேற்று (செப். 9) அமலாக்கத் துறை அலுவலர்கள் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ED questions Bineesh Kodiyeri
ED questions Bineesh Kodiyeri

By

Published : Sep 10, 2020, 4:29 PM IST

கொச்சி (கேரளா): தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக பினீஷ் கொடியேரியிடம் அமலாக்கத் துறை அலுவலர்கள் பல மணி நேரம் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் 2ஆவது மகன் பினீஷ் கொடியேரி. இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அத்துடன் பெங்களூரு, சென்னை உள்பட பல இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கேரளாவில் பிரபலமாகப் பேசப்படும் குற்றச் சம்பவங்களில் பினீஷ் கொடியேரி பெயரும் அடிபடுவது உண்டு. சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டது.

இதில் கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முகமது அனுபுக்கும், பினீஷ் கொடியேரிக்கும் தொடர்புள்ளது தெரியவந்தது.

இதனால், பினீஷிடம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ், பாஜ உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கிடையே திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சுவப்னாவின் வங்கி லாக்கரில் சோதனை நடத்தியபோது, ஒரு கிலோவுக்கும் மேல் நகைகள் மற்றும் ஒருகோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

கேரளாவில் ‘லைப் மிஷன்’ என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ், வடக்கன்சேரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதற்காக துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.20 கோடி அன்பளிப்பாக கொடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கேரளாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்திருந்தது.

இந்த நிறுவனம் தந்த தரகுத் தொகையைத்தான் லாக்கரில் வைத்திருந்ததாக சுவப்னா கூறியிருந்தார்.

பினீஷ் கொடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

இந்த நிறுவனத்தில் பினீஷ் கொடியேரிக்கும் முதலீடு இருப்பதாக அமலாக்கத் துறைக்கு தெரிந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக, நேற்று (செப். 9) ஆஜராகும்படி, நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், அவர் செப்டம்பர் 17ஆம் தேதி வரை அவகாசம் கேட்டதை அமலாக்கத் துறை நிராகரித்தது. இதையடுத்து, பினீஷ் கொடியேறி நேற்று காலை 10 மணிக்கு கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம் இரவு வரை தொடர்ந்து அலுவலர்கள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details