தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கள்ளக்குறிச்சி பழங்குடியினர் அலுவலகத்தில் சோதனை: ரூ 6 லட்சம் பறிமுதல்! - kallakurichi news

கள்ளக்குறிச்சி: மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 6 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

kallakurichi news
kallakurichi news

By

Published : Jan 5, 2021, 12:21 PM IST

கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகத்தில் சமையலர் பணிக்காக லஞ்சம் வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் அமுதா, விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி பழங்குடியினர் அலுவலகத்தில் சோதனை

இந்தச் சோதனையில் இளநிலை பொறியாளர் எழில்மாறன் என்பவரது காரிலிருந்து கணக்கில் வராத 31 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய சோதனையில் அலுவலக உதவியாளர் செல்வராஜ் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 6 லட்சம்‌ என மொத்தம் கணக்கில் வராத 6 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இதுகுறித்து அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...எனக்காக யாருமில்லை: குடும்பத்தினரை வெறுத்த இளம்பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details