தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவி வன்புணர்வு; 34 வயது இளைஞர் மீது புகார்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பிணியாக்கிய 34 வயது மதுபழக்கம் கொண்ட இளைஞர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

eightth standard girl pregnant
eightth standard girl pregnant

By

Published : Jan 4, 2021, 7:49 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, தாய் தந்தை இல்லாததால் பாட்டியுடன் வசித்து வருகிறார்.

இவர்களது அண்டை வீட்டுக்காரரான சதீஷ் முழு நேர குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குடிபோதையில், சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மாணவியின் வாயை பொத்தி வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில், மாணவியின் வீட்டில் இருந்து வெளியே வந்த சதீஷை அக்கம்பக்கத்தினர் திட்டி அனுப்பி உள்ளனர்.

தற்போது சிறுமி கர்ப்பிணியாக உள்ளதால் அக்கம்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், சதீஷ் குடும்பத்தார்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இது குறித்து அக்கம்பத்தினர் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவலளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அன்பு இல்லம் அலுவலர்கள், மாணவி கர்ப்பம் தரித்ததற்கு சதீஷ் தான் காரணம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியை அவர்களது காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் சதீஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டாலின் கடைசிவரை முதலமைச்சர் ஆக முடியாது- மு.க. அழகிரி

ABOUT THE AUTHOR

...view details