சென்னை ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஜே ஜே நகர் பகுதியில் மாவா பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக ஆர்கேநகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆர்கே நகர் எச்6 காவல் நிலைய ஆய்வாளர் கொடிவீரன் தலைமையில் மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்தவரை கைது செய்தனர்.
மாவா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது! - மாவா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது!
சென்னை: ஆர்கே நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மாவா விற்பனை செய்துவந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
![மாவா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது! மாவா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-car-1309newsroom-1600015704-849.jpg)
மாவா பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது!
அப்போது, அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சிறிய அளவிலான 200 மாவா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.