திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். இவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியின்போது நாகராஜூக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மப்பேடு அருகே சுங்குவார்சத்திரம் சாலையில் புதுப்பட்டு கிராமம் செல்லும் வழியில் நாகராஜ் 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.