பொட்வாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அஞ்சம்மாள் தம்பதி. இவர்களின் இரண்டாவது மகள் சங்கீதாவுக்கும், சூரியன் பட்டியைச் சேர்ந்த ராமையன் - புஷ்பவள்ளி தம்பதியின் மகன் முருகானந்தத்திற்கும் 2019ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற 102 ஜோடிகள் திருமணத்தில் ஒன்றாக திருமணம் நடைபெற்றது.
மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!
திருமணம் நடைபெற்ற சில நாள்களிலேயே மாமியார் புஷ்பவல்லி, கொழுந்தனார் தியாகராஜனுடன் இணைந்து வரதட்சனை கேட்டு தொடர்ந்து சங்கீதாவை கொடுமைப்படுத்தியுள்ளார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதா அனைத்து கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தாய் வீட்டில் சொல்லாமல் தனது துன்பங்களை மறைத்துள்ளார். மேலும், அவரது கணவரும் தனது தாய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்..
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவை நீயும் உன் வாரிசும் உயிரோடு இருக்கக் கூடாது என அவரது மாமியார் புஷ்பவல்லி கூறியதோடு, வயிற்றுப் பகுதியில் மண்ணெண்ணையை ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அலறி துடித்த சங்கீதாவை அவரது கணவரும் அக்கம்பக்கத்தினரும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்..
பெண்களின் தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது!
பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த சங்கீதாவிற்கு சில நாள்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த ஆண் சிசுவும் ஆபத்தான நிலையில் தஞ்சை இராசமிராதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
உயிரிழந்த பெண்ணின் மரண வாக்குமூலம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தஞ்சை தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் மாமியார் புஷ்பவல்லி மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தொடர் விசாரணை நடைபெற்றுவந்த சூழலில், இன்று சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.