தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

அமராவதி ஆற்றில் மூழ்கிய அரசு மருத்துவர், அவரது மகன் உயிரிழப்பு! - Fire Department to recover body of deceased

திருப்பூர்: உடுமலை கடத்தூர் அமராவதி ஆற்றில் இன்று (அக். 30) மாலை குளிக்கச் சென்ற மகள், மகனை காப்பாற்ற முயன்றதில் மகள் மீட்ட அரசு மருத்துவரும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

death
death

By

Published : Oct 30, 2020, 9:49 PM IST

சென்னை ஓமந்தூரில் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றிவரும் கணியூரைச் சேர்ந்த ஜோதிலிங்கம் (42), தன் மகளை காப்பாற்றி கரைசேர்த்த பின் தன் மகனான சர்வேஸ் ராஜாவை (11), காப்பாற்ற முயன்றபோது மகனுடன் இவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

தகவலறிந்து அமராவதி ஆற்றுக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் ஒன்றரை மணி நேர தேடுதலுக்குப் பின்பு சடலங்களாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர்.

மருத்துவர் ஜோதிலிங்கம் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் அர்ச்சுனேஸ்வரர் கோயிலுக்கு வந்தபோது, அமராவதி ஆற்றில் அவரது குழந்தைகள் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

ஆழமான பகுதிக்கு இருவரும் சென்ற நிலையில், ஜோதிலிங்கம் ஆற்றில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்று மகளை மீட்டு, மகனை மீட்க முயன்றதில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:தடைகளை தன்வசப்படுத்திய பெண்: இயற்கை விவசாய ஆசிரியையாக மாறிய பெண் விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details