தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கொண்ட வழிப்பறி கும்பலுக்கு வலைவீச்சு! - திருவள்ளூர் அருகே திமுக பிரமுகர் மீது தாக்குதல்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திமுக பிரமுகரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கொண்ட வழிப்பறி கும்பலை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Trivallur District

By

Published : Oct 9, 2019, 7:30 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காலனியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் மீஞ்சூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவர் செங்குன்றத்திலிருந்து வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக வந்தபோது, அவரை வழிமறித்த நான்குபேர் கொண்ட வழிப்பறி கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பணம் தராத ஆத்திரத்தில் அந்த கும்பல் அவரை பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதிதாக அமைக்கப்பட்டுவரும் சுங்கச்சாவடி அருகே உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவில் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிய கும்பல் பதிவாகியுள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருவள்ளூரில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

கம்மாவார் பாளையத்தைச் சேர்ந்த கவாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், கருணாகரனை வழிமறித்து பணம் தராத ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியதாகக் கருணாகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் கவாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த மிஞ்சூர் காவல் நிலையத்தினர் அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை தட்டிக்கேட்ட வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!

ABOUT THE AUTHOR

...view details