பல்லாவரத்தை அடுத்த பம்மல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி (32). தேமுதிக நிர்வாகியான இவர் பணிக்குச் சென்று வந்தவுடன் வழக்கம்போல் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு வெளியே நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டதையடுத்து, உடனே தண்டபாணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அவரது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தேமுதிக நிர்வாகியின் இருசக்கர வாகனம் தீயிட்டு எரிப்பு! - தேமுதிக நிர்வாகி
சென்னை: பல்லாவரத்தில் தேமுதிக நிர்வாகியின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்துவிட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளார். ஆனால், அதற்குள் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்துவிட்டது. பின்னர் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தண்டபாணி புகார் அளித்ததன் அடிப்படையில், நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தை எரித்த நபர் யார் என்று விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் மூதாட்டிக்கு அறிவாள் வெட்டு - 4 பேர் கைது