திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்த அனில் குமார் (48) பெயிண்டராக பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் கொடைக்கானல் பேருந்து நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபம் அருகே நேற்றிரவு அவரது தலையில் அடையாளம் தெரியாத நபர்கள் மதுபான பாட்டில்கள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து இன்று அதிகாலை அந்த வழியாக வந்த நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி ஆத்மநாதன், ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி இறந்தவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல் பெயிண்டர் படுக்கொலை மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அனில் குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரியாத நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : நிச்சயிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது