தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 24, 2020, 5:34 PM IST

ETV Bharat / jagte-raho

டெல்லி கலவரம்; வழக்குரைஞர் அலுவலகத்தில் சோதனை!

டெல்லி கலவர வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் மெக்மூத் பிராச்சா அலுவலகத்தில் சோதனை நடத்திய சிறப்பு காவல் அலுவலர்கள், அவரின் லேப்டாப்பை கைப்பற்றி சென்றனர்.

Delhi riots case advocate Mehmood Pracha police raid Mehmood Pracha's office Delhi police vs accused டெல்லி கலவரம் வழக்குரைஞர் மெக்மூத் பிராச்சா மெக்மூத் பிராச்சா வழக்குரைஞர் அலுவலகத்தில் சோதனை
Delhi riots case advocate Mehmood Pracha police raid Mehmood Pracha's office Delhi police vs accused டெல்லி கலவரம் வழக்குரைஞர் மெக்மூத் பிராச்சா மெக்மூத் பிராச்சா வழக்குரைஞர் அலுவலகத்தில் சோதனை

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக வழக்குரைஞர் மெக்மூத் பிராச்சா அலுவலகத்தில் சிறப்பு காவல் அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கலவரத்தின் பின்னணியில் உள்ள சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வழக்குரைஞர் மெக்மூத் பிராச்சா உபயோகிக்கும் லேப் டாப்பையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் டெல்லி கலவர வழக்கில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

அதேவேளையில் பாஜக அரசை சீர்குலைக்கும் வகையில் இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. ஏற்கனவே இந்த வழக்கில் உபா பாதுகாப்புச் சட்டத்தில் ஷார்ஜீல் இமாம், உமர் காலித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே பிப்ரவரி 24ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் மோதல் நடைபெற்றது.

இந்த வகுப்புவாத வன்முறையில் உளவுத்துறை அலுவலர் உள்பட 53 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: காவலரின் நெத்தியில் துப்பாக்கியை வைத்த ஷாரூக் பதானுக்கு பிணை மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details