தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது - காதல் விவகாரத்தில்

தஞ்சாவூர்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thanjavur

By

Published : Oct 20, 2019, 4:51 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(40). இவரது மகள் அனுசியா (16). கணவர் இறந்ததால் மகேஸ்வரி கூலிவேலை செய்து கொண்டு மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அனுசியா, உறவினரான ஆனந்தராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த தாய் மகேஸ்வரி, ஆனந்தராஜ் அண்ணன் உறவு முறை வேண்டும் என்பதால் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.

இதை தனது காதலான ஆனந்தராஜிடம் அனுசியா கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்தராஜ், தனது காதலியான அனுசியாவுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். இதையறிந்த மகேஸ்வரி திருவையாறு மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை ஆனந்த்ராஜ் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, காவல் துறையினர் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்தராஜ் காதலை கைவிட மறுத்ததால் அவர் மீது கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த ஆனந்தராஜ், தனது காதலியான அனுசியாவை சந்தித்து உன் அம்மா இருக்கும் வரை நமது காதல் நிறைவேறாது என்றும், அதனால் அவரை கொலை செய்து விடுமாறும் கூறியுள்ளார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த்ராஜ்

இதை மனதில் வைத்துக் கொண்ட அனுசியா நேற்றுமுன்தினம் இரவு தாயுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அனுசியா, அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து மகேஸ்வரியை தலையில் அடித்துள்ளார் . இதில் நிலைக் குலைந்து போன, மகேஸ்வரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலுக்காக பெற்ற மகளே தாயை அடித்துக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: மூதாட்டியை கொலை செய்த 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details