பெரம்பலூர்:மனைவியை இழந்து வீட்டில் தனியாக இருந்த கூலித் தொழிலாளிதூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பலூர் நகர்ப்புற பகுதி துறைமங்கலம் ஒளவையார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர பாண்டியன். கூலி வேலை செய்துவரும் சுந்தரபாண்டியனின் மனைவி கண்ணகி, சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், இவரது இரண்டு மகள்களில் ஒருவருக்கு திருமணமாகியும், மற்றொருவர் தாய் மாமன் வீட்டில் வசித்துவருகிறார்.