மும்பை:ஓய்வு பெற்ற கடற்படை வீரர் மதன் சர்மா மும்பையில் தாக்கப்பட்டார். அவரை சிவசேனா தொண்டர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களின் பிணை மீதான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆறு பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் தலா ரூ.15 ஆயிரம் பிணை தொகை கட்ட வேண்டும் என்றும் தினந்தோறும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட மதன் சர்மா, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது தன்னை தாக்கியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒய்வு பெற்ற கடற்படை வீரர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்தா நகரில் உள்ள கன்டிவல்லி காவல்நிலையத்துக்கு வெளியே இந்திய குடியரசு கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடற்படை வீரரை தாக்கிய சிவசேனா உள்ளூர் தலைவர்கள் மீது கொலை குற்ற வழக்கு பதிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இதையும் படிங்க:மரக் கட்டைக்கு உயிரூட்டும் பெண்கள்!