சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளி, அவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அபிநயா(12), என்ற மகளும், சங்கீத் (11) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நால்வரும் வேல்முருகனின் தந்தைக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
வேல்முருகன் காதல் திருமணம் செய்துகொண்டதால் சத்யாவிற்கும் அவரது மாமியார் தனலட்சுமிக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று நேற்றிரவு (பிப்.9) இருவருக்கம் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. அப்போது, தனலட்சுமிக்கு ஆதரவாக, கணவரின் தம்பி மனைவி ராஜாமணியும் சேர்ந்துகொண்டு சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனையடுத்து வேலை வீட்டு வீடு திரும்பிய வேல்முருகனிடம் சத்யா நடந்ததை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். நேற்றிரவு (பிப்.9) மஞ்சினி அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றவர்கள், இருவரும் விஷம் குடித்துவிட்டு தங்களது குழந்தைகளுக்கும் வாயில் ஊற்றியுள்ளனர்.